இரத்தத்தோடு தொழுகை செய்யும் சிம்பு - மாநாடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

Saturday, 21 November 2020 - 11:54

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21
நடிகர் சிம்பு கொரோனா முடக்கத்திற்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தியிருந்த நிலையில், கொரோனா முடக்கத்திற்கு பின்னர் அவர் சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துவிட்டார்.

இருப்பினும், தற்போது அவர் மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதோடு, தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று காலையில் “மாநாடு” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. போஸ்டரில் சிம்பு ரத்தம் வழிய தொழுகை செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.