ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள ஜோன்சன் சார்ள்ஸ்

Saturday, 21 November 2020 - 12:48

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
லங்கா பிரிமியர் லீக் தொடரின் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட் காப்பாளர் ஜோன்சன் சார்ள்ஸ் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக ஜப்னா ஸ்டேலியன் அணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகிய ரவி போப்பாராவுக்கு பதிலாக 6 வது வெளிநாட்டு வீரராக ஜோன்சன் சார்ளஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜப்னா ஸ்டேலியன் அணியில் ஜோன்சன் சார்ள்ஸ்சுடன், பாகிஸ்தானின் சொஹிப் மலிக், அந்த அணியின் உஸ்மன் சிங்வாரி, தென்னாப்பிரிக்காவின் க்ய்ல் அபோட் மற்றும் இங்கிலாந்து அணியின் டொம் மொரிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.