LPL தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

Saturday, 21 November 2020 - 12:53

LPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
லங்கா பிரிமியர் லீக் தொடரின் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைவாக கடுமையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் அழைத்துவரப்படுவதற்கு முன்னர் 72 மணி நேர காலப்பகுதியில் 2 பீ.சீ.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு குறைந்தது 10 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் எவருக்கேனும் கொவிட் 19 தொற்றுறுதியானால் உடனடியாக சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

லங்கா பிரிமியர் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ள ஹம்பாந்தோட்டை வளாகத்தில் 5 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 2 இராணுவதின் மருத்துவர்களும் கண்காணிப்பில் ஈடுப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெற்றிடம் ஏற்பட்டுள்ள காலி கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு தனுஷ்க குணத்திலக்க நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் தலைமை பொறுப்பு வழங்கப்படவிருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தொடரில் இருந்து விலகியதை அடுத்து அந்த பதவிக்கு தனுஷ்க குணத்திலக்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.