இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Saturday, 21 November 2020 - 15:52

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (19) கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது பீசிஆர் (PCR) பரிசோதனைகளை ஏற்பாடுசெய்தல் உள்ளடங்கலாக நோய்ப்பரவலினைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய ஊழியர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றலில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் முன்னெச்சரிக்கை வழிமுறையொன்றாக, இதுவரையிலும் வங்கி வளாகத்தில் நேரடியாகத் தொழிற்பட்ட வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் இரு வார காலப்பகுதிக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் இலத்திரனியல் வாயிலாக [email protected]/[email protected] அல்லது 011-2477966 என்ற தொலைபேசி ஊடாக அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய இலக்கங்கள் ஊடாக வங்கியினைத் தொடர்ந்தும் தொடர்புகொள்ள முடியுமெனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.