வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Saturday, 21 November 2020 - 16:55

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும 23ம் திகதி முதல் 25ம் திகதி வரையில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள தாழமுக்கநிலைமையால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் இன்று நள்ளிரவு முதல் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.