தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்.!

Sunday, 22 November 2020 - 8:08

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%21
தனிமைப்படுத்தலில் இருந்து நாளை அதிகாலை 5 மணியுடன் சில இடங்கள் விடுவிக்கப்படவிருப்பதாக இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த கொம்பனித்தெரு பகுதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

எனினும்இ மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோர பகுதி, ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வாழைத்தோட்டம், மருதானை, டேம்வீதி, புறக்கோட்டை முதலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்வதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய காவல்துறை அதிகார பகுதிகள் நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

எனினும், நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொடை, களனி முதலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்வதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் சில கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பண்டாரகம காவல்துறை அதிகார பிரிவில், போகாவத்தை, கிரிமன்குடாவ, கொரவலை, அட்டுலுகம, கலகஹமண்டிய, பமுனுமுல்ல மற்றும் பமுனுமுல்லை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.