நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி..! மண்டைதீவில் சம்பவம்

Sunday, 22 November 2020 - 8:29

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நேற்று மாலை நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்ததாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மண்டைதீவைச் சேர்ந்த 7 மற்றும் 5 வயதுகளை உடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை சேமித்து வைத்துள்ள தடாகத்தில் வீழ்ந்து அவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.