ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பெண் கண்டுபிடிக்கப்பட்டார்..!(காணொளி)

Sunday, 22 November 2020 - 8:36

%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருந்த நிலையில், அங்கிருந்து தமது குழந்தையுடன் தப்பிச் சென்றப் பெண் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டார்.

எஹெலியகொட பகுதியில் ஊர்மக்களால் அவர் கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் காணாமல் போய் இரண்டு தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் சென்ற இடங்களின் வழிதடங்கள் தொடர்பாக ஆராயப்படுகிறது.