மாவீரர் வார நினைவேந்தல்களை நடத்துவது, சட்டரீதியாக தடுக்கப்படவில்லை-எம்.ஏ.சுமந்திரன்

Sunday, 22 November 2020 - 8:32

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
தத்தமது வீடுகளில் இருந்து, சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து மாவீரர் வார நினைவேந்தல்களை நடத்துவது, சட்டரீதியாக தடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், மாவீரர் வாரத்தின் முதல்நாளான இன்று நல்லூரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.