ஜோ பைடனை நிறுத்துவதற்காக, டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட புதிய திட்டமும் தோல்வி

Sunday, 22 November 2020 - 8:39

%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%2C+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனை நிறுத்துவதற்காக, டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட புதிய திட்டமும் தோல்வி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும், டொனால்ட் ட்ரம்ப் அதனை தொடர்ச்சியாக மறுத்து வருகிறார்.

இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனலே ஜோர்ஜியா, அரிசோனா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் அவர் வாக்கு மீள் எண்ணுவதற்கு கோரி இருந்த நிலையில், மீள் எண்ணலில் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தார்.

தற்போது மிச்சிகன் தொகுதியில் தேர்தல் உறுதிப்படுத்தலை இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போடுமாறு கோரி, டொனால் ட்ரம்ப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இதனை மாநில நிர்வாகம் நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.