மகிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீடை சர்வதேச வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.

Sunday, 22 November 2020 - 8:45

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.
பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீடை சர்வதேச வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.

குறித்த பாதீடானது முற்போக்கு சிந்தனையுடனானதாக அமைந்துள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தொழில்முனைவோருக்கு மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியினை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் இந்த பாதீடு சிறந்ததாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஓய்வூதிய வயது மற்றும் காப்பீடு ஆகியவற்று தொடர்பிலும் உள்ளீர்க்கப்பட்டுள்ளதானது சிறந்தது எனவும் சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.