வணக்கத்துக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியை இன்று..!

Sunday, 22 November 2020 - 8:55

%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21+
காலமான இலங்கை இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக்கர் நாபான பேமசிறி தேரரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

பூரண அரச மரியாதையுடன் அவரது பூதவுடல் கண்டி - குண்டசாலை , பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்களில் தகனம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை இராமஞ்ஞ நிக்காயவின் அடுத்த மஹாநாயக்கர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்.

இதற்காக அந்த நிக்காயவின் செயற்குழு சங்க சபை இன்று முற்பகல் 8.30க்கு கூடவுள்ளது.

அதேநேரம் நேற்றையதினம் காலமான இலங்கை இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக்கர் நாபான்னே பிரேமசிறி தேரருக்கான சோகப்பிரேரணை நாடாளுமன்றில் பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் நேற்று முன்வைக்கப்பட்டிருந்தது.