வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 8 பேருக்கு கொரோனா

Sunday, 22 November 2020 - 8:53

%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
நேற்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த தகவலை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றை முன்தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து பிரவேசித்திருந்த நபரின் மகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.