குழு நிலை விவாதம் நாளை ஆரம்பம்

Sunday, 22 November 2020 - 9:14

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ம் திகதி முதல் டிசம்பர் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவு திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த வாக்கெடுப்பின் போது இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி 2021ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாத நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் நடைபெறும்.

அதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.