காவற்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்

Sunday, 22 November 2020 - 10:05

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை (23) மாலை 4 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது காவற்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிந்துரை செய்துள்ள பெயர்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வருடம் 7 மாதங்கள் வரையில் மேலதிக காவற்துறைமா அதிபராக கடமையாற்றியிருந்த சீ.டி.விக்ரமரத்னவை காவற்துறைமா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.