தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் மற்றுமொரு வீரருக்கு கொரோனா தொற்று

Sunday, 22 November 2020 - 9:40

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மூன்று இருபதுக்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் அணி, தென்னாபிரிக்கா சென்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்னாபிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொவிட் 19 பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் ஒரு வீரருக்கு கடந்த வியாழக்கிழமை கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவரது பெயர் விபரம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் நேற்று இடம்பெறவிருந்த தென்னாபிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் இரத்துச் செய்யப்பட்டது.

இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.