ஸ்ரீலங்கா இராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்க தேரராக விமல தேரர் நியமனம்

Sunday, 22 November 2020 - 9:29

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்கராக மகுலேவே விமல தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் செயற்குழு சங்க சபை ஒன்று கூடியது.

இராமாஞ்ஞ மகா நிக்காயவின் மகாநாயக்கரான நாபன்னே பிரேமசிறி தேரர் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மகுலேவே விமல தேரர் புதிய மகாநாயக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலமான இலங்கை இராமாஞ்ஞா மகாநிக்காயவின் மஹாநாயக்கர் நாபான்ன பிரேமசிறி தேரரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெறவுள்ளது.

பூரண அரச மரியாதையுடன் அவரது பூதவுடல் கண்டி - குண்டசாலை பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் தகனம் செய்யப்படவுள்ளது.