அதிக விலைக்கு விற்பனை செய்த அரிசி உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

Sunday, 22 November 2020 - 15:11

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
கட்டுப்பாட்டு விலையை விட அதிகூடிய விலைக்கு சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு அரிசியினை விநியோகித்த பொலன்னறுவை பகுதியில் அமைந்துள்ள அரிசி உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் புத்தளம் மாவட்ட அலுவலகத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகூடிய விலைக்கு அரிசியினை கொள்வனவு செய்ததால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளானதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையிடம் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

அது தொடர்பிலான சுற்றிவளைப்புக்களை மேற்கொண்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கட்டுப்பாட்டு விலையை மீறி குறித்தி அரிசி உற்பத்தி நிறுவனம் செயற்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ளனர்.

இதற்கமைய அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுத்ததாக நுகர்வோர் அதிகாரசபையின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த 20 நாட்களில் புத்தளம் மாவட்டத்தினுள் கட்டுப்பாட்டு விலையை விட அதிகூடிய விலைக்கு அரிசியினை விநியோகித்த 65 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.