வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

Sunday, 22 November 2020 - 13:32

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வங்காள விரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் ஒன்று உருவாகும் சாத்தியம் இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரை நீடிக்கும் கடற்பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும் அங்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

இந்த நிலையில் குறித்த பகுதிகளை பயன்படுத்தும் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.