சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

Sunday, 22 November 2020 - 13:25

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
2021 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கொவிட் 19 தடுப்பூசி விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் ஒபேக் அமைப்பு தமது எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்தும் குறைத்து வருவதால் இவ்வாறு எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எரிபொருளுக்கான கேள்வி குறைந்துள்ள போதிலும் ஆசிய நாடுகளின் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.