ரஷ்யாவின் - யக்குதியா - டொம்டோர் பகுதியில் நண்பர்களுக்கிடையில் விருந்துபசார நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இந்த விருந்துபசாரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு மதுபானமும் வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரமாக பல கொண்டாட்டங்களுடன் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது மதுபானம் நிறைவடைந்து விட்டதால் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்கள் மாற்று யோசனையை முன்வைத்துள்ளனர்.
கொவிட் 19 தொற்றினை ஒழிக்க பயன்படுத்தப்படும் தொற்று நீக்கும் திரவத்தை குடிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
69 வீதம் எத்தனோல் செறிவு காணப்படுவதை அறிந்த அனைவரும் அதனை பருகியுள்ளனர்.
பருகி சில மணித்தியாலங்களில் அனைவரும் மயக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.
அவசரமாக அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் தொற்று நீக்கியை பருகிய 27,28,32,59, மற்றும் 62 வயது பிரிவுகளை கொண்ட 5 ஆண்களும் 41 வயதுடைய ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என்பதோடு மேலும் இரு பெண்கள் மீளா மயக்க நிலைக்கு (கோமா) சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.