தீபாவளிக்காக சென்ற பலருக்கு கொரோனா..!

Monday, 23 November 2020 - 13:56

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21+
தீபாவளி பண்டிகைக்காக கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு சென்ற பல நபர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

மத்திய மாகாண சுகாதார சுகாதார சேவைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் கொழும்பில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதுவரையில் அங்கு ஒரே தினத்தில் அதிகளவான நோயாளர்கள் நேற்றைய தினமே பதிவானதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.