கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்

Tuesday, 24 November 2020 - 9:18

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் வசிக்கும் 72 வயதுடைய அவர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசீ ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர் வெலிக்ந்தை கொரோனா விசேட சிகிச்சைக்கான மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் அவருடன் தொடர்புகளை வைத்திருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.