கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் இன்றைய தினம் வரை 12,248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
12,248 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் நடமாடியிருக்கலாம்.
அவர்களுடன் நீங்களும் உரையாடலிலோ அல்லது நெருங்கியோ பழகியிருக்கலாம்.
இந்நிலையில் நீங்கள் வெளிமாவட்டங்களுக்கோ அல்லது மாகாணங்களுக்கோ சென்றால் கொரோனா தொற்றானது சமூக பரவல் நிலையை அடையும்.
இதனாலேயே நடமாட்டக்கட்டுபாட்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையினாலேயே கொழும்பிலிருந்து பிறமாகாணங்களுக்கு அல்லது மாவட்டங்களுக்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.