கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு..!

Thursday, 26 November 2020 - 15:09

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..%21
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை (27)முதல் ஒருவாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தகவாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அக்கறைப்பற்று பகுதியில் 21 பேருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.