5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி...!

Friday, 27 November 2020 - 15:35

5000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21
கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு மற்றும் நடமாட்டக் கட்டுபாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உணவுப்பொதிகள் என்பன தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.