அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு படைத் தலைமையகம் மேற்கொண்டுள்ள தீர்மானம்..!

Friday, 27 November 2020 - 16:09

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
போர்க்குற்றச்சாட்டுகளின் கீழ் அவுஸ்திரேலியாவின் 10 விசேடப்படைப்பிரிவு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய அந்த நாட்டின் பாதுகாப்பு படைத் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை அவுஸ்திரேலிய படையினர் சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்திருப்பதாக அண்மையில் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்தகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை, விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

எனினும் இந்த கொலைகளை புரிந்த குற்றச்சாட்டில் 19 விசேடப் படையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.