ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை..!

Saturday, 28 November 2020 - 6:53

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..%21
ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமாவந்த் பிராந்தியத்தில் உள்ள அப்சார்டில் தாக்குதலுக்கு உள்ளானப்பின்னர் ஃபக்ரிசாதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்ன உயிரிழந்தார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப், இந்த கொலை "பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளார்.

ஈரான் மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னால் ஃபக்ரிசாதே இருப்பதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் நம்புகின்றன.

"ஈரான் எப்போதாவது அணு ஆயுதங்களை உருவாக்குமாக இருந்தால், ஃபக்ரிசாதேதான் ஈரானிய அணுவாயுதத்தின் தந்தை என்று அறியப்படுவார்" என ஒரு மேற்கத்திய இராஜதந்திரி ஒருவர் 2014 இல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்து கூறிவருகிறது.

ஆனால் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த கரிசனை வெளியிடப்படுகின்ற சூழ்நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியமே பொது அணு மின் உற்பத்திக்கு, இராணுவ அணு ஆயுத உற்பத்திக்கும் முக்கிய அங்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.