இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா- போட்டி இடைநடுவே இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவம் (காணொளி)

Sunday, 29 November 2020 - 18:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
சுற்றுலா இந்திய அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 51 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 389 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டீவன் ஸ்மித் 104 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 83 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச், லெப்ஸ்சாக்னே மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் முறையே 60, 70 மற்றம் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 89 ஓட்டங்களையும் கே.எல்.ராகுல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும் சம்பா மற்றும் ஹசல்வுட் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவானதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டியின் இடைநடுவே இடம்பெற்ற ஓர் சுவாரஸ்யமான சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்த போட்டியைக் காண வந்த இந்தியர் ஒருவர் அவரது காதலியான அவுஸ்திரேலிய பெண்ணிடம் தனது திருமண அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் வீரர் கிளென் மெக்ஸ்வெல், பார்வையாளர் அரங்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு கரவோசை எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தார்.