பிளாஸ்டிக் கழிவுகளை நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் மூலப்பொருளாக பயன்படுத்த திட்டம்

Sunday, 29 November 2020 - 19:09

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கழித்தொதுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளில் மூலப்பொருளாக பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்படவுள்ளது.

இந்த பிளாஸ்டிக்; கழிவுகள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக் கலந்த கொங்கிரீட்டாக மாற்றப்படும்.

அத்துடன் வீதிகளுக்கு கார்ப்பட் இடுகையில், இந்தக் கொங்கிரீட் கலவையை பயன்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையும், தின்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபையும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.