தனிமைப்படுத்தலில் இருந்து புறக்கோட்டை விடுவிப்பு- வியாபார நடவடிக்கைகளுக்கு தடை

Sunday, 29 November 2020 - 19:34

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
புறக்கோட்டை பகுதியில் நாளை முதல் தனிமைப்படுத்தல் அகற்றப்படுகின்ற போதிலும் பழைய மெனிங் சந்தையிலும் 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளிலும் வியாபார நடவடிக்கைகளுக்கான தடை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர காவற்துறை அதிகார பிரிவுகள் என்பன நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

புறக்கோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் அகற்றப்படுகின்ற போதிலும் பழைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குவீதிகளில் வியாபார நடவடிக்கைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை நாளை முதல் எதிர்வரும் வெள்ளிகிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபையின் முதல்வர் ஜாலிய ஓபாத இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கலேவெல - தலகிரியாகம மகா வித்தியாலயத்தையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மாத்தளை-யட்டவத்தை, உனவேருவ மற்றும் துளுத்கம வடக்கு கிராம சேவகர் பிரிவு என்பனவற்றுக்கு நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.