கொரோனாவின் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு உள்ளது- மஹிந்த அமரவீர

Monday, 30 November 2020 - 7:06

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0
கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று நெருக்கடியால் சகல வருமானங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் எத்தகைய நிலைமையிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி, ஆடையுற்பத்தி, வெளிநாடுகளில் பணிபுரிவோர் மூலம் பெறும் வருமானம் என்ற ரீதியில் சகல வருமானங்களும் குறைந்துள்ளன.

உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும் சாத்தியமும் உள்ளது.

எனவே நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

பயிர்ச்செய்கை பாழாகும் பட்சத்தில் ஆறு வகை பயிர்களுக்காக ஹெக்டயாருக்கு ஒரு இலட்சம் என்ற ரீதியில் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.