இந்தியாவில் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த சட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம்- 2020 விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 ஆகிய இந்த மூன்று சட்டங்களை இந்திய மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றியபோது பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வேளாண்மையில் கொண்டுவந்துள்ள இந்தச் சீர்திருத்தம், விவசாயிகளைப் பிரச்சினைகளில் இருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் புதிய உரிமைகளையும், வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு இந்த உரிமைகள் கிடைத்தவுடன் அவர்களின் பிரச்சினைகள் குறுகிய காலத்தில் குறைந்து வருகின்றதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.