சூர்யாவின் ”வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டதா...!

Monday, 30 November 2020 - 12:41

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%9D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE...%21
நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் தீபாவளி தினத்தன்று இணையத்தளம் வாயிலாக வெளியாகி வவேற்பை பெற்றது.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவசாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இந்த படம் ஜல்லிக்கட்டு போட்டியினை அடிப்படையாக கொண்டதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் எனவும் அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் கொரோனா பரவல் காரணமாக குறித்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகவும். நகைச்சுவை நாயகன் சூரியை வைத்து பிரிதொரு திரைப்படத்தினை தயாரிக்க வெற்றிமாறன் தயாராகிவிட்டார் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றங்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில் சூர்யாவும் குறித்த திரைப்பட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வாடிவாசல் திரைப்பட குழு குறித்த செய்தியினை முழுமையாக மறுத்துள்ளது.

தீர்மானிக்கப்பட்டவாறு வாடிவாசல் திரைப்படம் சூர்யாவினை கதாநாகனாக கொண்டு தயாரிக்கப்படும் என அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.