லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று

Monday, 30 November 2020 - 13:19

%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தொடரின் ஐந்தாம் போட்டியான இன்றைய முதல் போட்டியில், தம்புள்ளை வைக்கிங் மற்றும் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று மாலை 3.30 அளவில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம் தொடரின் ஆறாம் போட்டியான இன்றைய இரண்டாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி க்லேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இரவு 8 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.