பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு-மஹிந்த அமரவீர

Monday, 30 November 2020 - 13:32

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக சகல வருமான வழிவகைகளும் முடக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எத்தகைய நிலைமையிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்றுமதி வருமானம், ஆடையுற்பத்தி சார் வருமானம் உள்ளிட்ட சகல வருமானங்களும் குறைந்துள்ளன.

உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.