மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சினால் குழுவொன்று நியமிப்பு

Monday, 30 November 2020 - 18:26

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கு ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலி சப்ரியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, நீதியமைச்சின் பிரதான சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா, நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன ஹப்புகஸ்வத்த, பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி ஜயசிங்க ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமை மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷாந்த தனசிங்க இந்த குழுவின் செயலாளராக செயலாற்றவுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணம், அது தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இந்த குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த குழுவினால் ஒரு வாரக்காலப்பகுதியில் இடைக்கால அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் ஒரு மாதத்திற்குள் குறுங்காலத்திலும் நீண்ட காலத்திலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைக்கும் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.