மலையக வைத்தியசாலைகள் பலவற்றில் சேவையாளர்களுக்கு பற்றாக்குறை- இராஜாங்க அமைச்சர் ஜீவன்

Monday, 30 November 2020 - 19:06

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
வன்னி மாவட்டத்தில் வைத்தியசாலைகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் தெரிவித்துள்ளார்.

பாதீட்டின் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் அதனைக் கூறினார்.

அதேநேரம், மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றில் சேவையாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்ற ஜீவன் தொண்டமான் இன்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூருவதற்கு தடைவிதிக்கப்பட்டமையை கண்டித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றும், அவர்கள் குறித்து சபையில் உரையாற்றி சட்டத்தை மீறுவதாகவும் குற்றம் சுமத்தினார்.