லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ளை வைகிங்ஸ் அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை வைகிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக அணித்தலைவர் திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, 219 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைகிங்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் உஸ்மான் ஷின்வாரி 3 விக்கெட்டுக்களையம் திசர பெரேரா மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவானார்.