ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதலாவது தொலைநிலை அமைச்சரவைக் கூட்டம்

Monday, 30 November 2020 - 20:42

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக "மெய்நிகர்" தொலை நிலை அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி தமது செயலகத்தில் இருந்தும், ஏனைய அமைச்சர்கள் தங்களின் அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மெய்நிகர்" தொலை நிலை அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னுரிமை அளித்துள்ளார்.

இது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அண்மையில் தொழில்நுட்ப அமைச்சை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தார்.

21 ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக கல்வித்துறை முதலீட்டை பொருளாதாரத் துறையுடன் ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் வகையில் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை

கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் நோக்கமாகும்.

அரச பொறிமுறையையும் சந்தை செயற்பாடுகளையும் எளிமைப்படுத்துவது, அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எண்மான நிர்வாகத்தை

விரிவாக்குவது புதிய அமைச்சின் முன்னுரிமையாகும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.