அமேசன் மழைக்காடுகளின் காடழிப்பு 2008 முதல் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல்

Tuesday, 01 December 2020 - 7:39

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+2008+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
பிரேசிலில் அமேசன் மழைக்காடுகளின் காடழிப்பு 2008 முதல் அதன் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளது.

அந்த நாட்டின் விண்வெளி நிறுவனமான இன்பே இதனைத் தெரிவித்துள்ளது.

2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜூலை வரை மொத்தம் 11,088 சதுர கிலோ மீற்றர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டன.

இது முந்தைய ஆண்டை விட 9.5% அதிகரிப்பு ஆகும்.

அமேசன் காடு, ஒரு முக்கியமான கார்பன் மையமாக இருப்பதுடன், இது புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைக்கிறது.

பிரேசில் ஜனாதிபதியாக ஜெயர் போல்சனாரோ 2019 ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து விரைவான விகிதத்தில் காடழிப்பு இடம்பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை பிரேசில் ஜனாதிபதி ஊக்குவித்து வருகிறார்.

அமேசன் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக்கொண்டிருப்பதுடன், சுமார் ஒரு மில்லியன் பழங்குடி மக்களையும் கொண்டுள்ளது.