பூகோள வெப்பநிலை அளவை 2.1 பாகை செல்சியசாக பேண முடியும்- காலநிலை செயற்பாட்டு கண்காணிப்பு அமைப்பு

Tuesday, 01 December 2020 - 19:07

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88+2.1+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பூகோள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் இலக்கை தக்கவைத்துக் கொள்ளக் கூடிய இயலுமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை செயற்பாட்டு கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கருத்துக்கள் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் நீண்டகாலத்துக்கான அர்ப்பணிப்பு குறித்த உறுதிப்பாடுகளின் அடிப்படையில் இந்த சாதகத்தன்மை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இந்த நூற்றாண்டு நிறைவடையும் போது, பூகோள வெப்பநிலை அளவை 2.1 பாகை செல்சியசாக பேண முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.