புரெவி சூறாவளி தரைத்தொடும் நேரம் அறிவிப்பு...!

Wednesday, 02 December 2020 - 11:46

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
'புரெவி' சூறாவளியானது இன்றிரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதிக்குள் திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான பகுதியில் தரைதொட்டு, முல்லைத்தீவை அண்மித்து ஊடறுத்து செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூறாவளி தற்போது திருகோணமலையில் இருந்து 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்தநிலையில் மீள் அறிவித்தல் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அசாதாரண காலநிலை தொடர்பான அவசர தகவல்களுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த சூறாவளி காரணமாக வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவரது செயலாளர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர்களினால் இது தொடர்பில் கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர தேவைகளுக்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த தொலை பேசி இலக்கத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் 24 மணித்தியாலங்களும் அழைப்பை ஏற்படுத்த முடியுமென மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்ட மக்கள் 077 395 7894 அல்லது 021 211 7117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.