கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்...!

Wednesday, 02 December 2020 - 14:40

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...%21
புரெவி சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண ஆளுனர்கள், அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான நிவாரணங்களை வழங்வதற்கான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று இரவு 7மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புரெவி சூறாவளி, திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரைதொட்டு, முல்லைத்தீவு ஊடாக மன்னார் வரையில் செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.