புரெவி சூறாவளி அச்சத்தில் திருகோணமலையிலிருந்து அம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டுள்ள கப்பல்கள்..!

Wednesday, 02 December 2020 - 17:46

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
திருகோணமலை கடறப்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

கடற்படை ஊடகப்பேச்சாளர் இந்திக்க சில்வா இதனை தெரிவித்தார்.

புரெவி சூறாவளியின் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக செயற்படுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் புரெவி சூறாவளியை எதிர்கொள்ள அனைத்துவிதமான முன்னேற்பாடுகளும் தயாராகவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேலும் புரெவி சூறாவளியினால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அடை மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மன்னார் - விடத்தல் தீவிலுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளதாகவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.