கொவிட்19 நோய்த் தடுப்பூசிய அங்கீகரித்த முதலாவது நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ளது.
பைசர் மற்றும் பயோ-என்-டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு, பிரித்தானியா தற்போது அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
95 சதவீத வினைத்திறனை வெளிப்படுத்துகின்ற குறித்த தடுப்பூசி, பயன்படுத்துவற்கு பாதுகாப்பானது என்று பிரித்தானியாவின் விதி ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அடுத்தவாரம் முதல் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படவுள்ளது.
முதன்மைப் படுத்தப்பட்ட குழுவினர் அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே பிரித்தானியா 20 மில்லியன் மக்களுக்காக 40 மில்லியன் தடுப்பூசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.