கொழும்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

Friday, 04 December 2020 - 10:04

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 627 பேரில் அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றையதினம் 402 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் கொவிட்-19 காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகரிடம் முறையற்ற ரீதியில் நடத்து கொண்ட கொரோனா நோயாளரை குணமடைந்த பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம காவல்துறையினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் கருத்துரைத்த போதே இந்த உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த கொரோனா நோயாளர் அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் உமிழ்ந்து முறைகேடாக நடத்து கொண்டடிருந்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவவ்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆயிரத்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.