பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது...!

Tuesday, 22 December 2020 - 20:44

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் டெவன் கொன்வே அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பாகஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகூடதலாக 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் தொடரை நியூசிலாந்து அணி 2 பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது