புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுறுடன் பிரித்தானியாவில் மேலும் இரண்டு பேர் அடையாளம்

Thursday, 24 December 2020 - 8:50

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுறுடன் பிரித்தானியாவில் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் குறித்த புதுவகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

முன்பு கொரோனா வைரஸ் காரணமாக இளைஞர்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

எனினும் புதுவகை கொரோனா வைரஸ் காரணமாக இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.