இந்தியானாவைச் சேர்ந்த கறுப்பினப்பெண் மருத்துவர் உயிரிழந்தார்..!

Friday, 25 December 2020 - 15:08

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21

இனப்பாகுப்பாட்டின் காரணமாக தமக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்த அமெரிக்காவின் இந்தியானாவைச் சேர்ந்த கறுப்பினப்பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

52 வயதான சூசன் மூர் என்ற குறித்தப் பெண், கடந்த 6ம் திகதி, தாம் வைத்தியர்களால் இனரீதியாக பாகுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைப் பெற்று வந்த இந்தியானா பல்கலைக்கழக வைத்தியசாலை நிர்வாகம் அவரது குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெள்ளையினத்தவர்களை விட கறுப்பினத்தவர்களே கொவிட்19 நோயினால் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.